பக்கம்:ஆண்டாள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

103


செங்கணும் கரிய கோல மேனியுமாகத் திகழ்ந்து கதிரும் மதியமும் ஒருங்கிணைந்தது போன்ற முகத்தையுடையவன்.

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

-திருப்பாவை : 1

2. மாயன்; நிலைபெற்ற வடமதுரையில் வாழ்கின்ற மைந்தன்; துய்மையான பேரளவு கொண்ட நீர்ப்பெருக் குடைய யமுனை யாற்றுத்துறைவன்; ஆயர்குடியில் அவதரித்த அணிவிளக்கு தான் பிறந்ததால் தாயின் வயிற்றை ஒளிபெறச் செய்த தாமோதரன்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கஞ் செய்ததா மோதரனை

-திருப்பாவை : 5

3. அகங்கார மமகாரம் என்ற பூதனைப் பேயின் உயிரைப் பருகியவன்; காமக்குரோதமென்ற சகடாசுரனைக் கட்டுக்குலையும் வண்ணம் முறித்தவன்; பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்டுள்ள பரந்தாமன்.

...............பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை

--திருப்பாவை : 6

4. குதிரையாக வடிவெடுத்து வந்து குழந்தைக் கண்ணனைக் கொல்ல வந்த கேசி என்ற அசுரனின் வாயைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/105&oldid=1157413" இலிருந்து மீள்விக்கப்பட்டது