பக்கம்:ஆண்டாள்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

105


போல நின்று எக்காலத்தும் அவனை அச்சுறுத்திய பெருமான் கண்ணன் ஆவான்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒரிரவில்
ஒருத்தி மகனா யொளித்து வளரத்
தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே
-திருப்பாவை : 25

8. எதிரிகளை வென்றே நிற்கும் வழக்கம் உடைய கோவிந்தன்.

கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா
-திருப்பாவை : 27

9. மாடுமேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டுள்ள சாதியிற் பிறந்துள்ளவன் கண்ணன்.

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்துநீ
-திருப்பாவை : 29

(ஆ) இராமாவதாரம்

1. இராமபிரானால் இறந்துபட்டவன் கும்பகருணன் உன் உறக்கத்திற்குத் தோற்று அவன் உறக்கத்தையும் உனக்குத் தந்துவிட்டானோ?

...............புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
-திருப்பாவை : 10

ஆ·一7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/107&oldid=1157417" இருந்து மீள்விக்கப்பட்டது