பக்கம்:ஆண்டாள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

ஆண்டாள்


2. பொங்கிவந்த கோபத்தினால் தென்னிலங்கைக்கு அதிபதியாகிய இராவணனைக் கொன்றொழித்தவன் மனத்துக்கு இனியவனான இராமபிரான் ஆவன்.

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானை
-திருப்பாவை 12

3. நாங்கள் தேடிவந்த இதே திருவடிகள் முன்பு சீதைப் பிராட்டியின் பொருட்டுத் தென்னிலங்கை சென்று இராவணனை அழித்து அந் தகரை நீறாக்கிற்று.

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
-திருப்பாவை : 24

(இ) பிற அவதாரங்கள்

1. பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் - திருப்பாவை:2

2.ஓங்கி உலகளந்த உத்தமன் - திருப்பாவை: 3

3. அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி - திருப்பாவை: 24

ஆயர் மகளிர் வாழ்வு

அடுத்தபடியாக ஆயர்தம் வாழ்க்கையையும் அவர் விரும்பி வளர்க்கும் பசுக்களின் வளத்தினையும் காண்போம்.

ஆயர்மகளிர் வாழும் ஆய்ப்பாடி செல்வ வளம் மிக்குத் திகழ்கிறது. அவர்கள் வளர்க்கும் பசுக்கள், அவைகளின் பருத்த மடிகளைப் பற்றி இடையர் இழுத்த அளவில் வேண்டு மட்டும் குடங்களை நிறைக்கும் விருப்பமாய்ப் பாலைச் சொரிகின்றன.

......சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற்பெரும் பசுக்கள்
-திருப்பாவை 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/108&oldid=1462107" இலிருந்து மீள்விக்கப்பட்டது