பக்கம்:ஆண்டாள்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


108 ஆண்ட

கனைத்திளங் கன்றெருமை கன்றுக்கிரங்கி

நினைத்து மூலைவழியே கின்றுபால்சோர

நனைத்தில்லம் ரேறாக்கும் நற்செல்வன் தங்காய்.

- திருப்பாவை : 1.2

இவ்விடத்தில் புறநானூற்றில் இடம் பெற்றிருக்கும் கபிலர் பாடல் கருதத்தக்கது.

பெருங்குடிமக்களாகத் திகழ்ந்த பாரியின் பறம்புமலை வாழுநர், மண்டையென்னும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்து இரந்து கேட்ட இரவலர்க்கு அப்பாத்திரத்தில் கள்ளை ஊற்று கின்றனர். அப்பாத்திரம் நிரம்பியது ஊற்ற வனுக்கும் தெரிய வில்லை; ஊற்றப்படுவோனுக்கும் தெரியவில்லை. எனவே பாத்திரத்தினின்றும் வழிந்து கீழே இவர்ந்தோடும் கள், தரையில் உள்ள கற்களை உருட்டிச் ச்ெல்கின்றனவாம். அந்த அளவிற்கு இருவர்பாலும் கட்குடிமயக்கம் இருந்ததாம். பொய்யா நாவிற் கபிலர், புலனழுக்கற்ற அந்தணாளர் கபிலர், ஒருவாத புகழுடைய திருவாதவூர் அந்தணர் கபிலர் பாடுகின்றார். பாடல் வருமாறு: -

ஒருசா ரருவி யார்ப்ப வொருசார் பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் வாக்க வுக்க தேக்கட் டேறல் கல்லலைத் தொழுகு மன்னே பல்வேல் அண்ணல் யானை வேந்தர்க்கு இன்னா னாகிய இனியோன் குன்றே.

- புறநானூறு : 113

கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் எதிர்த்துப் பொங்கி மேலே வழியத் தங்கு தடையில்லாமல் பாலைச் சொரியும் கொடைத் தன்மை மிகுந்த புசுக்களை மிகுதியாகப் பெற்றிருக்கிறார்கள் ஆயர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/110&oldid=524701" இருந்து மீள்விக்கப்பட்டது