பக்கம்:ஆண்டாள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

109


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான்,
- திருப்பாவை : 21

இயற்கைப் புனைவு

இனி, ஆண்டாள் இயற்கையைப் புனைந்து பாடியுள்ள திறம் காண்போம். சிறந்த கவிஞர்கள் ஒர் அடியிலே, ஏன் ஒர் அடைமொழியிலேகூடப் படிப்பவர்தம் மனத்தின் முன் காட்சித் திரைகளை விரிக்கும் ஆற்றல் பெற்றவராவர். (“In a single line, sometimes in a simple epithet, the poet can flash upon our imagination a picture that shall seem filled with passionate emotion.” (C.T. Winchester, Some Principls of Literary Criticism; p. 135)

அம்முறையில் திருப்பாவைச் செல்வியாரும் எங்கும் இயற்கையின் இனிய பெற்றியினைப் படிப்பவர் மனங்கொள் வருணித்துரைக்கும் பாங்கு பாராட்டற்பாலது. ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள் காண்போம்:

1. மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள்
- திருப்பாவை : 1

2.ஓங்குபெருஞ் செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
 -திருப்பாவை : 3

ஓங்கி வளர்ந்த பெரிய செம்மையான நெற்பயிர்களின் இடையே வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன்கள் துள்ளி விளையாட வரப்புகளில் முளைத்திருக்கும் கருநெய்தற் பூக்களில் ஒளிபொருத்திய வண்டுகள் மயங்கிப் படுத்திருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/111&oldid=1462110" இருந்து மீள்விக்கப்பட்டது