பக்கம்:ஆண்டாள்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். சி. பா.
111
 கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்

- திருப்பாவை : 8

தோட்டத்துக் குளத்தில் வைகறை நேரத்தில் மலரும் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்து மணம் வீசி நிற்கின்றன. இரவில் மலர்ந்து வைகறையில் வாடிக் குவியும் அல்லி மலர்கள் இதழ் கூம்பி வாய் மூடின.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்

- திருப்பாவை : 14

கோழிகள் வைகறையில் எழுந்து சுற்றிலும் குரல் எழுப்புகின்றன. குருக்கத்திக் கொடி படரும் பந்தல்மேல் குயில்கள் பல முறை கூவி விட்டன.

வந்தெங்கும் கோழி யழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

- திருப்பாவை : 18
வீரமும் காதலும்

ஆண்டாள் கண்ணனை வீரமும் காதலும் இணைந்த நிலையிற் காண்கிறார். ஒன்றிற்கொன்று பிறப்பிடங்களன்றோ!

முப்பத்து மூவர் அமார்க்கு முன்சென்று
கப்பந் தவிர்க்கும் கலியே

 
- திருப்பாவை : 20

எனறும்,

செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்

- திருப்பாவை : 11
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/113&oldid=1157489" இருந்து மீள்விக்கப்பட்டது