பக்கம்:ஆண்டாள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

ஆண்டாள்


செப்பு பேன்ற மார்பகங்களையும் சிறுத்த இடையினையும் உடைய நப்பின்னையே அழகியவளே! நீ உறக்கத்திலிருந்து எழுந்திரு! விசிறியையும் கண்ணாடியையும் கொண்டு உன் கணவனை எழுப்பி, எங்களை அவன் அன்புக் கடலில், அழகுக் கடலில், அருட்கடலில் திளைக்கச் செய் என்று ஆயமகளிர் அன்பாக வேண்டுகின்றனர்.

செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன்மணாளனை
இப்போதே யெம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்

-திருப்பாவை : 20

உள்ளக்கிழியில் உருவெழுதல்

'தொழும்பர் உளக்கோயிற்கேற்றும் விளக்கு' எனக் குமர குருபரர் இறைவனை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழிலே பாடி மகிழ்ந்தார். மழைபொழியும் மாட்சியாகிய ஒரு காட்சியினைத் திருப்பாவைச் செல்வியர் நம் கண் முன் நிறுத்திக் காட்டும் அழகுதான் என்னே!

கடலுக்குள் புகுந்து நீரை மொண்டு கொண்டு, இடி இடித்து, ஆகாயத்தில் எறியும் அவனியிலுள்ள அனைத்துயிர்க் குலத்திற்கும் ஆதிமூலமான நாராயணனுடைய உருவத்தைப் போல் உடல் கறுத்தும், விசாலமான அழகிய திருத்தோள்களையுடைய நாபிக் கமலத்தையுடைய பெருமாள் கையில் ஒளியுடன் திகழும் சக்கிராயுதம்போல் ஒளியுமிழ்ந்து மின்னியும், அவனது இடக்கையிலுள்ள வலம்புரிச் சங்கைப் போல நின்று உலகு கிடுகிடுக்கும்படி ஒலித்தும், காலக்கழிவு செய்யாமல் ஆண்டவனுடைய வில்லாகிய சாரங்கம் வேகத்துடன் விரைந்து வீசிய அம்புகளின் மழையைப் போலவே நீயும் உலக உயிர்கள் அனைத்தும் உய்ந்து வாழும் பொருட்டு மழையாகப் பொழிய வேண்டும். நாங்களும் மகிழ்ச்சியுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/116&oldid=1462116" இலிருந்து மீள்விக்கப்பட்டது