பக்கம்:ஆண்டாள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

115


மார்கழி நீராடுகிறோம். மழைக்கு அதிபதியான வருணனே நீ உன் கொடைக் குணத்தினின்று ஒரு சிறிதும் கோடாமல் மழை பொழிவாயாக,

ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழிஅந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

-திருப்பாவை 4


மற்றுமொரு காட்சி

தாமரை மலரைப் போன்ற செவ்விய கண்கள் எளிதாகச் சந்திரனும் சூரியனும் எழுந்திருப்பது திரும்பமாட்டாவோ போல அழகிய கண்கள் இரண்டினாலும் எங்கள் மேற் பார்வையை ஓடவிட்டால், எங்களுக்குள்ள வருத்தம் மறைந் தொழியும் என்று ஆயர்மகளிர் கண்ணனிடந்தில் கழறுகின்றனர்.

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்க ணிரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேற் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

- திருப்பாவை : 22

பிறிதொரு காட்சி வருமாறு :

மழைக்காலத்தில் மலைக் குகையில் படுத்துக் கிடந்து துரங்கிக் கிடக்கும் வீரஞ்செறிந்த சிங்கம் எழுந்து, தன் நெருப்புப் போன்ற சிவந்த கண்களைத் திறந்து, பிடரிமயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/117&oldid=1462118" இலிருந்து மீள்விக்கப்பட்டது