பக்கம்:ஆண்டாள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

ஆண்டாள்


சிலிர்த்து உடம்பை நான்கு பக்கவிலும் முறித்து, உதறிக் கொண்டு கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜனை செய்து கிளம்பி வெளியில் வருவது போல, காயாம்பூப் போன்ற நீல நிறமுடைமவனான நீயும் உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து சிறந்த வேலைப்பாடுகள் பொருந்திய அரியணையில் அமர்ந்து நாங்கள் உன்னை நாடிவந்த காரணம் என்ன என்று உசாவி அருளவேண்டும் என்கின்றனர் ஆயப்பாடி மகளிர்.

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்ம எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில்நின் றிங்ங்னே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

- திருப்பாவை : 23


ஒரு நாடகக் காட்சி

காட்சிகளை வருணிப்பதிலும், உரையாடல்களை வளாத்திச் செல்வதிலும் ஆண்டாள் ஒரு நாடகக் காட்சியை நம் மனக்கண்முன் கொண்டு வருகின்றார் எனலாம்.

வைகறையில் கண்விழித்தெழுந்த மகளிர் கூட்டமாகச் சேர்ந்து சென்று சற்றுப் பிடிவாத குணமுள்ள ஒரு பெண்ணை எழுப்ப முயலுகிறார்கள். வீட்டினுள்ளே எழுப்பப்பட வேண்டிய பெண்ணும், வீட்டிற்கு வெளியே அவளை எழுப்புகின்ற பெண்களுமென நிற்கிறார்கள். உரையாடல் தொடங்குகின்றது.

வீட்டிற்கு வெளியிலிருப்போர்: இளமை பொருந்திய கிளிக்கு நிகரான பெண்ணே! இன்னுமா தூங்குகிறாய்? இஃது எங்கட்கு வியப்பை விளைவிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/118&oldid=1462119" இலிருந்து மீள்விக்கப்பட்டது