பக்கம்:ஆண்டாள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

117


வீட்டிற்கு உள்ளிருப்பவள்: அடி பெண்களே! மனம் சில்லென்று உறையும்படி என்னை அழைக்க வேண்டாம். இதோ நான் எழுந்துவந்து விடுகின்றேன்.

விட்டிந்கு வெளியிலிருப்போர் : உன் கட்டுக்கதைகளை நாங்கள் அறிவோம். உன் வாய் வீச்சும் எங்களுக்குத் தெரியும். எனவே எழுந்து வா, விரைந்து புறப்படு.

வீட்டினுள்ளே இருப்பவள்: நீங்கள் பேச்சில் வல்லவர்களாகவே இருந்து விட்டுப் போங்கள், கவலையில்லை. நான் பேச்சில் சோடை போனவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

வீட்டின் வெளியிலிருப்போர் : சரி, சரி! விரைவில் வா: மாயவனைப் பாடுதற்கு எல்லோரும் வந்துவிட்டோம். வேண்டுமானால் வெளியில் வந்து எங்களை எண்ணிப் பார்த்துக்கொள். அவனைப் பாடிப் பறைகொள்வதைவிட வேறென்ன பயனுடைய காரியம் இருக்கிறது உனக்கு?

இனிப் பாடலை நோக்குவோம் :

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென் றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லிர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

- திருப்பாவை : 1.5

இனி இறுதியாகத் திருப்பாவை நோன்பு குறித்தும், அது நோற்கப்பட வேண்டிய முறை குறித்தும், எம்பெருமான் அருளவேண்டிய திறம் குறித்தும், அருள் பெற்றபின் ஆடிப் பாடி மகிழ்ந்து கூடியுண்ணும் ஆனந்தக் காட்சி குறித்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/119&oldid=1462120" இலிருந்து மீள்விக்கப்பட்டது