பக்கம்:ஆண்டாள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

121


ஆயமகளிர் பாவை நோன்பு நோற்பதனால் ஒப்பற்ற உயர்தலைவனாம் எம்பெருமானையே எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் கணவனாக அடைவர் என்பதாம்.

மிகவும் விடியற்காலையில் வந்து உன்னைப் பணிந்து தொழுது, பொன்னாற் செய்யப்பட்ட தாமரை மலருக் கிணையான உன் திருவடிகளைத் துதிக்கும் காரணத்தைக் கோவிந்தனே நீ, கேட்டுக்கொள்! மாடு மேய்த்து வாழும் சாதியிற் பிறந்துள்ள நீ, எங்களை உன் கைங்கரியத்துக்கு ஏற்றுக்கொள்ளாமல் போகக் கூடாது. பசுக்களைக் காப்பவனே! இன்றைக்கு மட்டும் உன் அருளைப் பெற்று நாளைக்கு விலக்கிவிடும் நோக்கில் நாங்கள் எங்கள் கோரிக்கையை உன்முன் வைக்கவில்லை. என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்னோடு ஒன்றுசேர்ந்தவளாகவேயிருப்போம். உனக்கு மட்டுமே அடிமைகளாக அமைந்து பணி செய்வோம். நீ எங்களுடைய மற்ற ஆசைகளை அகற்றிவிட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உமக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

-திருப்பாவை : 29

இத்திருப்பாவை இறுதியிற் குறித்த பயனையே, மணிவாசகப் பெருந்தகையார் பாடிய திருவெம்பாவையிற் காணலாகும் கீழ்க்காணும் இரு பாடல்களும் குறிப்பிடக் காணலாம்: ஆ. -8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/123&oldid=1462125" இலிருந்து மீள்விக்கப்பட்டது