உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

ஆண்டாள்


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம்; ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார்; அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்;
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்,
என்ன குறைவுமிலோ மேலோர் எம்பாவாய்.

-திருவெம்பாவை : 9

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்;
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க;
எங்கை உனக்கல்லா தெப்பணியும செய்யற்க;
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க;
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்,
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பர்வாய்.

-திருவெம்பாவை : 19

இறைவனைத் துரயோமாய் அமைந்து அவன் மலரடிகளில் மலர்களை இட்டு அருச்சித்துத் தொழுது, வாயினால் அவன் புகழ் பாடி, மனத்தினால் அவன் அளக்கலாகா அருட்டிறத் தினைச் சிந்தித்தால் செய்த பிழைகளும் அறியாமையால் இனிச்செய்ய விருக்கும் பிழைகளும் நெருப்பினுள் தூசு எரிந்து மடிவது போல மாய்ந்தழியும் என்று ஆண்டாள் செப்புகின்றார்.

தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

-திருப்பாவை : 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/124&oldid=1462126" இலிருந்து மீள்விக்கப்பட்டது