டாக்டர். சி. பா.
127
பாஞ்ச சன்னியத்தைப் பற்பநா பனோடும்
வாய்ந்த பெருஞ்சுற்ற மாக்கிய வன்புதுவை
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லாரார் அவரும ணுக்கரே10
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியார் ஆகுவரே11
சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது
வந்திழி யும்சிலம்பா றுடைமாலிருஞ் சோலைநின்ற
சுந்தரனைச் சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே12
வில்லி புதுவை விட்டுசித் தர்தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே13
போன்னியல் மாடம்பொ லிங்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தர் கோதை
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே14
அல்லல் விளைத்த பெருமானை
ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவைங்கர் நம்பி
விட்டுசித்தன் வியன்கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே15