பக்கம்:ஆண்டாள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா. 11

தால் கூறினார்" என்று கடவுள் வாழ்த்துக் குறட்பாவுக்குப் பரிமேலழகர் உரை காண்பது உன்னத்தக்கது. ஆகவே, தன்முனைப்பு அற்று எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் நல்ல உள்ளம் மனிதனுக்கு என்று தோன்றியதோ அன்றே அவன் பண்பட்டவன். ஆனான்.

சமயம், பண்பாட்டு மாளிகையில் வாயிற்படி என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகும்.

கல்லிடைப் பிறந்து போந்து

கடலிடைக் கலத்த நீத்தம்

எல்லையில் மறைக ளாலும்

இயம்பரும் பொருளி தென்னத்

தொல்லையின் ஒன்றே யாகித்

துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்

பல்பெருஞ் சமயஞ் சொல்லும்

பொருளும்போல் பரந்த தன்றே

-கம்பராமயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலம் 19. என்று கம்ப நாட்டாழ்வார் கூறுகின்றார்.

ஆதலால் சமயங்களின் உண்மைநிலையை நோக்கும்போது அவை ஒன்றற்கொன்று முரண்பட்டன அல்ல என்பது தெளிவாகும். எல்லா ஆறுகளும் கடலை நோக்கியே செல்லுகின்றன. அதுபோலவே, எல்லாச் சமயங்களும் இறைவனை நோக்கியே செல்லுகின்றன. ஒரே பொருளின் வெவ்வேறு பகுதிகளை மட்டும் கண்டு அதுதான் முழுப்பொருள் என்று கருதிப் பெயரிடுகின்றோம்; ஒரே பொருளுக்கு வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன; இவை போலத்தான் உலகத்திலே பற்பல சமயங்களுமே உள்ளன. இதனை மேலும் தெளிவுற உணர்தற்கு,

பேரை யொருபொருட்கே பல்வகையாற் பேர்த்தெண்ணும் தாரை நிலையை தமியை பிறரில்லை"

- கம்பராமாயணம்; இரணியன் வதைப்படலம், 159

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/13&oldid=957098" இலிருந்து மீள்விக்கப்பட்டது