பக்கம்:ஆண்டாள்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
128
ஆண்டாள்
 


பருந்தாட் களிற்றுக் கருள்செய்த

பரமன் றன்னைக் பாரின்மேல்

விருந்தா வனத்தே கண்டமை

விட்டுசித்தன் கோதைசொல்

மருந்தாமென்று தன்மனத்தே

வைத்துக்கொண்டு வாழ்வார்கள்

பெருந்தாளுடைய பிரானடிக்கீழ்ப்

பிரியா தென்று மிருப்பாரே.[1]

இதுகாறும் தொடுத்து எடுத்துக்காட்டப் பெற்ற கோதையார் தம் கோதில் தமிழுரைகள் தமிழின் ஏற்றத்தை யும், தெய்வத்தோடு அத்தமிழ் இரண்டறக் கலந்து நிற்றலை யும் எழிலுற எடுத்துரைக்கும்.

சைவர் கோயில் உற்சவங்களில் சிவபெருமான் முன்னே செல்லத் தேவார இசை பாடுவோர் பின்னே கைத்தாளமிட்டுப் பாட்டுப்பாடி வருவர். வைணவர் கோயில் உற்சவங்களில் வேத பாராயணக் குழுவினர் முன்னே செல்லப் பெருமாள் பின்னே உலா வருவர். தமிழறியும் பெருமாளாகத் - தமிழின் பின் விரும்பி நைந்து செல்லும் பச்சைப் பசுங்கொண்டல்ாகத்திருமர்ல் கருதப்படுகின்றார். கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகரத்தில் கணிகண்ணன் என்னும் வைணவ அடியார் ஒருவர் வாழ்ந்து வர, அவர் நாடோறும் காஞ்சிப்பதிவாழ் பெருமாளை வணங்கி நிற்க, அவர் மேல் ஏதோ ஒரு காரணம் பற்றி அழுக்காறு கொண்ட அவ்வூர் அரசன் அவரை அவமதிக்க, அது பொறுக்கலாற்றாத கணி கண்ணன் நேரே தான் வணங்கும் பெருமாளிடம் சென்று,

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய செந்நாப் புலவன் போகின்றேன் நீயுமுன்றன்

பைங் நாகப் பாய் சுருட்டிக் கொள்[2]

  1. 16
  2. 17
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/130&oldid=991552" இருந்து மீள்விக்கப்பட்டது