பக்கம்:ஆண்டாள்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர். சி. பா.
131
 


தையொரு திங்களும் தரைவிளக்கித்

தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள் ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து

அழகினுக் கலங்கரித் தனங்கதேவா உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி

உன்னையு மும்பியையும் தொழுதேன். வெய்யதோர் தழலுமிழ் சக்கரக் கை

வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே."

வெள்ளை நுண்மணலால் தெருவை அழகு செய்கிறார், விடிவதற்கு முன் எழுந்து நீர்நிலைக்குச் சென்று நீராடுகிறார். முள்ளிலாச் சுள்ளி விறகெடுத்து அதனை எரியவிட்டுக் காம தேவனைக் கைதொழுது நின்று, புள்ளின்வாய் பிளந்த புனிதனை வாழ்க்கையில் மணாளனாகக் கூட்டி வை என்று வேண்டி நிற்கிறார்.

வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து, முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து

முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா, கள்ள விழ் பூங்கனை தொடுத்துக்கொண்டு

கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி, புள்ளினை வாய்பிளர் தானென்பதோர்

இலக்கினில் புக்வென்னை யெய்கிற்றியே:

பூக்களால் எங்கும் கோவிந்தன் என்று பெயரெழுதி நிற்கிறார்.

கொத்தலர் பூங்கனை தொடுத்துக்கொண்டு

கோவிந்த னென்பதோர் பேரெழுதியை

நெல், கரும்பு. கட்டியரிசி, அவல் முதலியன வைத்துப் படைக் கின்றனர், மறையவர் ஒதும் மந்திரங்களால் மன்மதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/133&oldid=524724" இருந்து மீள்விக்கப்பட்டது