பக்கம்:ஆண்டாள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

135


அச்சிற்றில் வீதிகளெங்கும் அழகுறத் திகழ்கின்றது. கண்டவர் கண்களைக் கவர்வனவாயும் பார்ப்பவர் மனங்களைப் பாராட்டுரைக்கச் செய்வனவாயும் செய்கின்றது. ஆனால் நீயோ நாங்கள் பாடுபட்டு உழைத்துச் சமைத்த சிற்றிலை அழிக்க வருகிறாய். அவ்வாறு ஒரு வேளை அழித்து விட்டாலும், உன் மீது உள்ளம் ஒடி, அன்பு மிகுந்து உருகி நிற்போமேயல்லாமல் உன்னிடத்தில் நாங்கள் கோப மொன்றும் கொள்ளமாட்டோம். கள்ளத்தனம் வாய்ந்த மாதவனே! கேசவனே! உன் முகத்தில் உள்ளன கண்களா, அல்லவே என்கிறார்கள் ஆயப்பாடிச் சிறுமியர்.


வெள்ளை நுண்மணல் கொண்டுசிற்றில்
விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல்
மழித்தியாகிலும் உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா! கேசவா! உன்
முகத்தனகண்க ளல்லவே.31

இலங்கையைக் கோபத்தாலே சீரழித்த சிரீதரனே! இலங்கை செல்லச் சேதுப்பாலம் சமைத்த சேவகனே! அப்படிப் பட்ட நீ- பாலம் கட்டிய நீ, பாவம்- எங்கள் சிற்றிலை வந்து சிதைக்கலாமா? என்று நயம்பட வோர் வினா எழுப்பி, அவனுள்ளத்தில் ஒர் இரக்கவுணர்வை ஏற்படுத்தப் பார்க்கின்றனர்.


செற்று. இலங்கையைப் பூசலாக்கிய
சேவகா எம்மை வாதியேல்32


சேதுபந்தம் திருத்தினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையேலே33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/137&oldid=1462139" இலிருந்து மீள்விக்கப்பட்டது