பக்கம்:ஆண்டாள்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

137


ஏழைமை யாற்றவும் பட்டோம்
இனியென்றும் பொய்கைக்கு வாரோம்,
தோழியும் நானும் தொழுதோம்
துகிலைப் பணித்தரு ளாயே.34

இங்கே என்ன நேர்ந்தது! நீ இந்தக் குளக்கரைக்கு எவ்வாறு வந்தாய்? துளசிமாலை அணிந்த தூயனே! திருமாலே! மாயனே! எங்கள் அமுதே! ஏதோ எங்கள் விதி! எங்கள் நேரம் சரியில்லை; இன்று வந்து உன்னிடம் சரியாக அகப்பட்டுக் கொண்டோம். காளிங்க நர்த்தனம் செய்த கண்ணபிரானே! வித்தகம் விளைவிக்கும் பிள்ளையே! நீ ஏறியிருக்கும் குருந்த மரத்திற் கொண்டுபோய் ஒளித்து வைத்திருக்கும் எங்கள் ஆடைகளையெல்லாம் எங்கட்கு அளிக்கமாட்டாயா?

இதுவென் புகுந்ததிங் கந்தோ!
இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்,
மதுவின் துழாய்முடி மாலே!
மாயனே! எங்க ளமுதே,
விதியின்மை யாலது மாட்டோம்
வித்தகப் பிள்ளாய்! விரையேல்,
குதிகொண் டரவில் நடித்தாய்!
குருந்திடைக் கூறை பணியாய்.35

அந்தோ! இஃதென்ன இளமைக் கொடுமை! எங்கள் விட்டார் பார்த்தால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நீ செய்யும் செயல் உன் தகுதிக்கு அடாத செயல். தகாத செயல் என்பதனை நீ கருத மாட்டாயா? பூக்கள் நிறைந்த குருந்த மரத்திலேறிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாய்! கோதண்டம் எனும் வில்லால் வீரம் விளைவித்து இலங்கை மன்னன் இராவணனை அழித்த அழகனே! நீ என்னென்ன விரும்புகின்றாயோ, அவற்றையெல்லாம் நாங்கள் உனக்கு உளமாரத்

ஆ. –9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/139&oldid=1462141" இருந்து மீள்விக்கப்பட்டது