பக்கம்:ஆண்டாள்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
142
ஆண்டாள்
 


தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்
சிறுகுயிலே44

பொங்கொளி வண்டிரைக் கும்பொழில்
வாழ்குயிலே45

என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத்
ததைத்தாதே நீயும் குயிலே46

மேலும் இப்பத்தில் சில இலக்கிய நயங்களையும் காணக்கூடும்.

மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரண மாகஎன்
சங்கிழக் கும்வழக் குண்டே47

என்னும் பாடலடிகள் அத்தகைய நயங்களில் ஒன்றைக் கொண்டுள்ளன. கண்ணனைக் காதலித்ததன் காரணமாக என் கைகளில் உள்ள சங்கு வளையல்கள் என் கைகளை விட்டு நீங்கக் காரணமாகிவிட்டன என்பதாம்.

வெண்மையான சங்கைக் கையிலே கொண்ட விமலன் கோதையாரின் உள்ளத்திற்புகுந்து நாள்தோறும் மெலிவித்து உயிரினைப் போக்கா நிற்கிறான். எலும்பு நெக்குருகிக் கருநெடும் வேற்கண்கள் இரண்டும் ஒன்றையொன்று பொருந்தாமல் பல நாட்கள் கழிந்துவிட்டமையால் துன்பம் என்னும் கடலில் மூழ்கி வைகுந்தம் என்பதோர் தோணி பெறாமல் துயருழக்கின்றேன்; அன்புடையாரைப் பிரிந்து வாழுதல் எத்துணை அருமைப்பாடுடைய செயல் என்பதனை, காதலி யோடு வாழும் ஏ குயிலே! நீ அறிவாயல்லவா? என்று ஆண்டாள் அரற்றும் போக்கில் அமைந்துள்ளது நான்காவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/144&oldid=1157696" இருந்து மீள்விக்கப்பட்டது