பக்கம்:ஆண்டாள்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

145


கவனமாகக் கேட்பாயாக! சங்கொடு சக்கரத்தைக் கையிலே தாங்கிக் கொண்டிருக்கும் திருமால் வருகிறார் என்று கூவுதல் வேண்டும்; இல்லையேல் என் கைகளினின்றும் கழன்றோடிப் போன என்பொன் வளைகளைக் கொண்டுவந்து தருதல் வேண்டும். இங்கிருக்கும் சோலையில் நீ நிரந்தரமாகத் தங்கி கருதுவாயேயானால் இந்த இரண்டு காரியங்களில் ஒன்றைக் வாழக்கட்டாயம் செய்ய வேண்டும்.

பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்
பாசத் தகப்பட்டி ருந்தேன்.
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி
லே! குறிக் கொண்டிது நீகேள்,
சங்கொடு சக்கரத் தான் வரக் கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில்
இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்54

"தென்றலும் திங்களும் என் உடம்பை அறுத்துக் கூறு போட்டு நலிவிக்கின்றன என்றென்றைக்கும் இச்சோலையில் வாழ விரும்பினால் நீயும் என்னை மேலும் துன்புறுத்தாதே! நாராயணன் இன்று இங்கு வருவான் என்று கூவுவாயாக! இன்றேல் இங்கிருந்தும் உன்னை நிச்சயமாகத் துரத்துவேன்."

அன்றுல கம்மளக் தானை யுகந்தடி
மைக்கண வன்வலி செய்ய,
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை
நலியும் முறைமை யறியேன்,
என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத்
ததைத்தாதே நீயும் குயிலே,
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன்55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/147&oldid=1462149" இருந்து மீள்விக்கப்பட்டது