உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

ஆண்டாள்


இவ்வாறாக, "விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி, 'கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு கருங்குயிலே' என்று கேட்டுக் கொண்ட வேண்டுகோளே இலக்கிய நயம் இயைய ஐந்தாம் பத்தாக உருக்கொண்டுள்ளது எனலாம்."

தமிழில் வழங்கும் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் "தூது" என்பதும் ஒன்றாகும். ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குத் தெரிவிக்க இடையே பிறிதொருவரை அனுப்புவது தூது எனப்படும். “A kind of poem in Kali Venba which purports to be a message of love snts through a companion, a bird etc., to effect a reconciliation." என்ற ஆங்கில விளக்கம் தமிழ்ப் பேரகராதியாற் பெறப்படுகின்றது.

அரசர்கள் பகையரசர்கள் மாட்டுத் தூதனுப்புவதும். புலவர்கள் வள்ளல்களிடத்துத் துரதனுப்புவதும். தலைவர்கள் தலைவியரிடத்தில் தூதனுப்புவதும், தலைவியர் தலைவர் களிடத்துத் தூதனுப்புவதும் இயல்பு என்பதனைப் பழந்தமிழ் நூல்கள் கொண்டு தெளியலாம்.

சொல்லா மயின் அவற்றொடு கெழீஇச்
செய்யா மரபிற் றொழில்படுத் தடக்கியும்56

என்னும் தொல்காப்பிய நூற்பா காமமிக்க கழிபடர்கிளவியினைச் சுட்டுவதனை உய்த்துணரலாம். பின்வரும் நூற்பாக்கள் துரதிலக்கணம் கிளத்துவனவாம்.

பயிறருங் க்லிவெண் பாவினாலே
உயர்தினைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்துறு தூதெனப்
பாட்டியல் புலவர்கள் நாட்டினர் தெளிந்தே57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/148&oldid=1462150" இலிருந்து மீள்விக்கப்பட்டது