பக்கம்:ஆண்டாள்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

147


எகினமயில் கிள்ளை எழிலியொடு பூவை
சகிகுயினெஞ் சந்தென்றல் வண்டு தொகைபத்தை
வேறுவேறா கப்பிரித்து வித்தரித்து மாலைகொண்டன்பு
ஊறிவா வென்றல் தூது58

இயம்புகின்ற காலத்து எகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி - நயந்தகுயில்
பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே
தூதுரைத்து வாங்கும் தொடை59

புறநானூற்றில் பிசிராந்தையார் என்னும் புலவர் கோப்பெருஞ் சோழனிடத்தில் ஒர் அன்னச் சேவலைத் தாது விடுத்தார் என்பதும், அதியமான் தன் பகைமன்னனாம் தொண்டைமானிடத்தே ஒளவையாரைத் தூது விடுத்தான் என்பதும் அறியப்படும் செய்திகளாகும். நற்றிணையில் நாரை விடுதூது, கிளி விடுதூது, வண்டு விடுதூது, குறுந்தொகையில் வண்டு விடுதூது, ஐங்குறு நூற்றில் நெஞ்சு விடுதூது. அகநானூற்றில் நண்டு விடுதூது குறித்துப் பாடல்களைக் காணலாம். தேவாரத்தில் அன்னம், அன்றிற்பறவை, குயில், குருகு, கிளி, நாரை, பூவை, வண்டு வாரணம் தென்றல், சேவல், கொண்டல் முதலியனவற்றைத் தூது விட்டதாக நாயன்மார்கன் பாடியுள்ள பாடல்களைக் காணலாம். திருக்கோத்தும்பியும் குயிற்பத்தும் திருவாசகத்தில் தூது எனும் போக்கில் அமைந்திருக்கக் காணலாம். ஆழ்வார்கள் பாடல்களில் மேக விடுதூது, குயில் விடுதூது. செம்போத்து விடுதூது, நாரை விடுதூது, வண்டு விடுதூது முதலியன இடம் பெற்றுள்ளன. பிற்காலத்தே ஓர் இலக்கியமாக எழுந்தது எனச் சொல்லத்தக்கது கொற்றவன் குடி உமாபதி சிவாசாரி யார் இயற்றிய நெஞ்சுவிடுதூது என்னும் நூலாகும்.

பணவிடுதூது, தமிழ் விடுதூது. மான்விடுதூது வனசவிடுதூது, சவ்வாதுவிடுதூது, நெல்விடுதூது, புகைபிலைவிடுதூது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/149&oldid=1462151" இருந்து மீள்விக்கப்பட்டது