பக்கம்:ஆண்டாள்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

ஆண்டாள்


விறலி விடுதூது, துகில் விடுதூது, காக்கை விடுதூது, கழுதை விடுதூது, பழையது விடுதூது. அன்பு விடுதூது, செருப்பு விடுதூது முதலான தூது கள் பிற்காலத்தே எழுந்தன.

இப்பின்னணியில் நாச்சியார் திருமொழியில் இடம் பெற்றுள்ள மேக விடுதுரதினைக் காண்போம்.

'விண்ணிலை மேலாப்பு' எனத் தொடங்கும் பத்து, திருவாய் மொழியில் எட்டாம் பத்தாய் இலங்குகின்றது. நாச்சியார் வேங்கடமலையின் உச்சிமீதும் செல்லும் மேகங்களைப் பார்த்து வேங்கடவனிடம் தூது செல்லுமாறு வேண்டுகின்றார். இந்தப் பத்தில் ஆண்டாளின் உணர்ச்சிவெள்ளத்தினையும், கற்பனைச் சிறப்பினையும் நயங்கெழுமிய கருத்துகளையும் கண்டு இன்புறலாம்.

இத்திருவேங்கடம் சங்ககாலந்தொட்டே. தமிழ் இலக்கியங்களில் கவிஞர்களால் பாடப் பெற்று வரும் தலமாகும். ஒருசில பாட்டுகளைக் காண்போம்

ஈன்று அணிமை கழிந்த மெல்லிய நடையழகு கொண்ட இளைய பெண் யானையினுடையவும் அதன் கன்றினுடையவு மர்ன பசியினைப் போக்குவதற்காகப் பசிய கண்ணினையுடைய ஆண்யானை மூங்கிலின் முற்றாத முளையினைக் கொண்டு உண்பிக்கும் மலைச் சாரலையுடையது திரையன் காக்கும் வேங்கட மலையாகும்.

சாரல்
ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி
கன்றுபசி களைஇய பைங்கண் யானை
முற்றாத மூங்கில முளைதரு பூட்டும்
வெள்வேல் திரையன் வேங்கட நெடுவரை60

கண்ணனார் என்னும் புலவர் பாடிய பாட்டு இது. நக்கீரர் பெருமானும் வேங்கடமலையைத் தம் பாடலொன்றுள் பாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/150&oldid=1157770" இருந்து மீள்விக்கப்பட்டது