பக்கம்:ஆண்டாள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

ஆண்டாள்


இந்தப் பெருமாள் திருமொழியினை நன்கு மனத்திற் பதித்துக் கொண்ட பிற்காலப் புலவரான வீரராகவ முதலியார் தாம் இயற்றிய திருவேங்கடக் கலம்பகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

மாடாக நிழற்றுசெழு மரனாகத் தவச்சிறிய
பீடாகக் குழைத்தநறும் புதலாக வழிப்படுவேன்
ஓடாகப் பெறுவமெனில் உயிர்காணற் கதிபெறலாம்
வீடாகத் திருநெடுமால் வீற்றிருக்கும் வேங்கடத்தே74

இவ்வாறு கவிஞர் பலரும், அருளாளர் பலரும் பாடிய வேங்கட நெடுவரையைக் கருத்திற்கொண்டே அம்மலைமுகடு நோக்கிச் செல்லும் மேகக் கூட்டங்களை விளித்து ஆண்டாள் வேங்கடத்தானிடம் தூது செல்லுமாறு கேட்டுப் பாடுகிறார். அப்பாடற் கருத்துகள் வருமாறு :

"மேகங்களே! விண்ணிற்கு மேலாப்பு விரித்தாற்போல் வான வீதியிற் செல்லும் வனப்புடைய மேகங்களே! உங்களோடு வேங்கடத்து எம்பெருமானும் வந்தானோ! என் கண்களிலிருந்து கண்ணிர் பெருகி முலைத்தடத்தின் வழியே இழிகின்றது. பெண்ணின் பெருமையைப் பீடழிக்கும் நிலை அவனுக்குப் பெருமை சேர்க்காதே" என்று குறிப்பிடுகின்றார்.

விண்ணில வேலாப்பு
விரித்தாற்போல் மேகங்காள்,
தெண்ணிர்பாய் வேங்கடத்தென்
திருமாலும் போந்தானே?
கண்ணிர்கள் முலைக்குவட்டில்
துளிசோரச் சோர்வேனை,
பெண்ணிர்மை பீடழிக்கும்
இது தமக்கோர் பெருமையே?75

மேலும் கோதையார் தொடர்கிறார். 'மாமுகில்களே வேங்கடவன்மாட்டு யான் கொண்ட காமத்தி என்னுள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/154&oldid=1462155" இலிருந்து மீள்விக்கப்பட்டது