டாக்டர். சி. பா.
153
புகுந்து என்னை அலைக்கழித்து வாட்டுகின்றது இந்நிலையில் நள்ளிரவில் என் நோயை நலிவிக்கும் தென்றலுக்கு இலக்காகித் தவிக்கிறேன். அத்தென்றற்காற்று என் காமத் தீயிற்குத் துணை போய் என் அளவுபடாத நோயை மேலும் மிகுவிக்கின்றதே! என் செய்வேன்?' என அரற்றுகின்றார் ஆண்டாள் பிராட்டியார்.
மாமுத்த நிதிசொரியும்
மாமுகில்காள், வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட
தாடாளன் வார்த்தையென்னே!
காமத்தி யுள்புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்,
ஏமத்தோர் தென்றலுக்கிங்
கிலக்காநா னிருப்பேனே76
இத்துன்பத்திலிருந்து விடுபட ஒரு வழி இருப்பதை எண்ணி மகிழ்கிறார் அவர். என் துன்பம் கையிகந்து பெருகினால் வேங்கடத்துறை எம்மானாம் கோவிந்தனின் குணம்பாடி என் உயிரைக் காத்து நிற்பேன் என்கிறார்.
ஒளிவண்ணம் வளை சிந்தை
உறக்கத்தோ டிவையெல்லாம்:
எளிமையா லிட்டென்னை
ஈடழியப் போயினவால்,
குளிரருவி வேங்கடத்தென்
கோவிந்தன் குணம்பாடி,
ஆளியத்த மேகங்காள்!
ஆவிகாத் திருப்பேனே77
என்னதான் தம்மைத் தேற்றிக் கொண்டாலும் ஆற்றாமை மீதுரத்தானே செய்யும். எனவே கூறுகிறார் என் மார்பகங்கள்
ஆ.- 10