உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

ஆண்டாள்


அவரைப் புல்லுதற்கு விரும்புகின்றன; எனவே இவ்வென்விழைவையாவது அவரிடத்தே போய் அறிவியுங்கள் என்கிறார்.

மின்னாகத் தெழுகின்ற
மேகங்காள்! வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை
தங்கியசீர் மார்பற்கு,
என்னாகத் திளங்கொங்கை
விரும்பித்தாம் நாடோறும்
பொன்னாகம் புல்குதற்கென்
புரிவுடைமை செப்புமினே78

வானை நோக்கித் திரண்டெழுந்து செல்லும் மேகங்களே! வேங்கடத்தில் தேன் நிறைந்த மலர்கள் சிதறும் வண்ணம் மழை பொழிவீர்கள். வேங்கடவனோ தன்னுடைய கூர்மையான நகங்கொண்டு இரணியன் உடலத்தைக் கிழித்து அடியவர்க்கு அருள் சுரந்தான். ஆயினும் என்பால் அவனுக்ரு அன்போ அருளோ இல்லை. என்னிடமிருந்து பெற்றுக் கொண்ட வளைகளை மீண்டும் என்கைகளிற் பொருந்தத் தர வேண்டும் என்கிறார்.

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த
மாமுகில்காள் வேங்கட்த்துத்
தேன்கொண்ட மலர் சிதறத்
திரண்டேறிப் பொழிவீர்காள்,
ஊன் கொண்ட வள்ளுகிரால்
இரணியனை யுடலிடந்தான்,
தான் கொண்ட சரிவளைகள்
தருமாகில் சாற்றுமினே.79

ஓர் அழகிய உவமை வாயிலாகவும் தம் நிலைமையைச் சாற்றுகின்றார் கோதையார். விளாம்பழம் வெளியிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/156&oldid=1462157" இலிருந்து மீள்விக்கப்பட்டது