பக்கம்:ஆண்டாள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

157


'திருமாலின் திருவுருப்போலும் மலர்மேல் மதுவுண்டு கிடக்கும் வண்டினங்கள் காட்சி வழங்குகின்றன. அத்தகைய வண்டினங்களே, பூஞ்சுனைகளே! அப்பூஞ்சுனைகளில் மலர்ந்து மனம்விசிக்கொண்டிருக்கும் செந்தாமரை மலர்களே! எனக்கு உய்யும் வழி ஒன்று காட்டுவீர்களாக?' என்று கைகடந்து சென்று நிற்கும் ஆற்றாமை மீதூர ஆண்டாள் பாடுகிறார்.

துங்க மலர்ப்பொழில்சூழ்
திருமாலிருஞ் சோலைநின்ற,
செங்கட் கருமுகிலின்
திருவுருப் போல், மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்!
தொகுபூஞ்சுனை காள் சுனையில்
தங்குசெந் தாமரைகாள்!
எனக்கோர் சரண் சாற்றுமினே83

ஒருவரை வயப்படுத்துவதற்குச் சாம, பேத, தான, தண்டம் எனும் நான்கு முறைகளில் ஒன்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பர். இங்குத் தானமுறையைக் - கொடை முறையைக். கைப்பிடிக்க முனைகிறார் ஆண்டாள்.

"மணமிக்க மலர்ச்சோலைகள் நிறைந்த திருமாலிருஞ்சோலை இறைவற்கு நான் நூறு தடாக்களில் அவன் விரும்பியுண்ணும் வெண்ணெயைப் பரப்பி வைத்தேன். மேலும் நூறு தடாக்களில் அவன் மகிழ்ந்து சாப்பிடும் அக்கார வடிசிலை வட்டித்துவைத்தேன். திரு நிறைந்த அத்திருவாளன் - அம் மணவாளன் இன்று இங்கு வந்து இவற்றை ஏற்றுக் கொள்ளுவாரோ?' என்று அங்கார்ந்த எதிர்பார்ப்புடன் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார் வாய்அரற்றி நிற்கிறார்.

நாறு நறும்பொழில்மா
லிருஞ்சோலை நம்பிக்கு. நான்
நூறு தடாவில்வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/159&oldid=1462160" இலிருந்து மீள்விக்கப்பட்டது