பக்கம்:ஆண்டாள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

ஆண்டாள்


நூறு தடாநிறைந்த
அக்கார வடிசில்சொன்னேன்.
ஏறு திருவுடையான்
இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ!84

திருமாலிருஞ்சோலையப்பன் இன்று இங்கு வந்து இத்தனையும் அமுது செய்து அருளினால் நான் ஒன்று நூறாயிரமாகக்கொடுத்துப் பின்னாளிலும் வழங்குவேன். அவன் என் மனத்தே வந்து நேர்ப்பட்டு உறைய வேண்டும் என்கிறார் ஆண்டாள்.

இன்றுவந் தித்த னையும்
அமுதுசெய் திடப்பெறில், நான்
ஒன்றுநூ றாயிரமாக்
கொடுத்துப்பின் னாளும்செய்வன்,
தென்றல் மணங்கமழும்
திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான், அடியேன்
மனத்தேவந்து நேர்படிலே85

காலையிலிருந்தே கரிய குருவிக் கூட்டங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை திருமாலின் வரவைக் கட்டியங் கூறிச்சொல்லி நிற்கின்றன 'சோலை மலைப்பெருமான். துவராபதி யெம்பெருமான், ஆலினிலைப் பெருமான்' வருவான் என்னும் வார்த்தையினையே அவை தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

கோங்கலரும் சோலைகள் நிறைந்த திருமாலிருஞ்சோலையில் கொன்றைமலர்கள் மாலைகளாய்த் தொங்குகின்றன. அவற்றோடு உடனாய் நின்று நானும் தொங்குகிறேன். எம்பெருமான் வாயினின்றும் ஒலியெழுப்பும் சங்கும், கையிலிருந்து ஒலியெழுப்பும் வில்லும் எப்பொழுது என்னை வந்து ஆட்கொள்ளும்? என்கிறார் ஆண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/160&oldid=1462161" இலிருந்து மீள்விக்கப்பட்டது