பக்கம்:ஆண்டாள்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

159


அதாவது சங்கு சக்கரயுதங்களுடன் எம்பெருமான் எளியவள் பால் அருள்நோக்கம் செலுத்துவது எக்காலம் என ஏக்கமுறுகிறார் அவர்,

கோங்கல ரும்பொழில்மா
லிருஞ்சோலையில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைகளோ
டுடனாய்கின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து
மடுத்துதிய சங்கொலியும்,
சார்ங்கவில் நாணொலியும்
தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ?86

அடுத்து, ஆண்டாளின் பார்வை ஆண்டு மலர்ந்திருக்கும் கார்க்கோடல் பூக்கள்பாற் செல்லுகின்றது. துன்பக்கடலில் அமிழ்ந்து நிற்பவர் ஒரு சிறு துரும்பு கைக்குக் கிடைத்தாலும் அதனைப் பற்றிக் கரையேற வேண்டுமென்று விரும்புவார் களன்றோ? அம்முறையில் கார்க்கோடல் பூக்களைப் பார்க்கிறார். "கார்க்கோடல் பூக்களே! கண்ணன் என்மேல் உங்களைப் போர் செய்யுமாறு பணித்துவிட்டு எங்குப் போய் விட்டான்? அந்தப் பாம்பணையான் படுத்திருக்கும் பாம்புக்கு இரண்டு நாக்குகள் இருப்பதுபோல் அவனுக்கும் இரட்டை நாக்குதான்" என்கிறார், சொன்ன சொல்லை மறந்துவிடுவது என்றபடி.

கார்க்கோடல் பூக்காள்! கார்க்கடல்
வண்ணனென் மேல் உம்மைப்
போர்க்கோலம் செய்து போர
விடுத்தவன் எங்குற்றான்?87

பாவியேன் தோன்றிப் பாம்பணை
யார்க்கும்தம் பாம்புபோல்
நாவு மிரண்டுள வாய்த்து
நாணிலி யேனுக்கே88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/161&oldid=1462162" இருந்து மீள்விக்கப்பட்டது