உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

ஆண்டாள்


கடலையும் நோக்கிக் 'காமமிக்க கழிபடர் கிளவி' களாகக் கோதை உரைக்கும் தமிழ் கோதில் தமிழ் என்பது பின்வரும் இரண்டு பாடல்களால் தெளிவுறும்.

மழையே! மழையே! மண்புறம்
பூசியள் ளாய்நின்ற,
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல்
வேங்கடத் துள்நின்ற,
அழகப் பிரானார் தம்மையென்
நெஞ்சத் தகப்படத்
தழுவிநின்று என்னைத் ததர்த்திக்கொண்
டூற்றவும் வல்லையே?92

கடலே! கடலே! உன்னைக்
கடைந்து கலக்குறுத்து,
உடலுள் புகுந்துகின் றூறல்
அறுத்தவற்கு, என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல்
அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக்
கேசென்று ரைத்திய93

நள்ளிரவிலும் ஒலிக்கும் கடலைநோக்கிச் சங்க காலத் தலைவி யொருத்தி வினவுவதாக அமைந்திருக்கும் குறுந்தொகைப்பாடலொன்று ஈண்டு ஒப்புநோக்கி மகிழ்தற்குரியது.

யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குகின் குரலே94

ஆண்டாள் முதலில் திருமாலிருஞ்சோலை மலையானைப் பாடினார்: பின் திருவேங்கடமலையானைப் பாடினார். அத்திருத்தலத்துறை திருமாலழகரும், திருவேங்கடநாதரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/164&oldid=1462165" இலிருந்து மீள்விக்கப்பட்டது