பக்கம்:ஆண்டாள்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். சி. பா. 1.65

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமோ யாள்கின்ற வெம்பெருமான், செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார். எங்கோல் வளையா லிடர் தீர்வ ராகாதே."

அடுத்த பாடல் மேலும் நயமுடைத்தாய்த் துலங்கு கின்றது.

"மேல்தளங்களாலே அழகு செய்யப்பட்ட மாடங்களை யும் மதில்களையுமுடைய திருவரங்கத்திலே எழுந்தருளி யிருப்பவராய், முன்பு வாமனாவதாரம் மேற்கொண்டவராய், பெரிய பெருமானாய், மாவலிச் சக்கரவர்த்தியிடம் கேட்ட பிச்சையிலே குறை ஏற்பட்டு, அக்குறையைத் தீர்த்துக் கொள்வதற்காக, என் கைகளில் அணியப் பெற்றிருக்கிற வளைகள் மேல் விருப்பமுடையவரானால், இத் தெருவழியாக எழுந்தருளி, என் வளைகளைக் கைக்கொண்டு, அக்குறை யினை முடித்துக் கொள்ள மாட்டாரோ.'

மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார், பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற, பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல் இச்சை யுடையரே லித்தெருவே போதாரே?99

நல்லார்கள் வாழும் நளிரரங்க நாதனையான் இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா

னொத்துளனே400

என்ற அடிகளில் சிலேடை நயம் அமைத்துப் படுகிறார் ஆண்டாள்.

என் கைம்முதலான பொருள்களைக் கொள்ளை கொள்ளும் நோக்கில் திருவரங்கனார் திகழ்கின்றார் என்னும் கருத்துப் புலப்படக் காண்க.

காவிரிபுரக்கும் திருவரங்கத்துச் செல்வனார் எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்கின்றார். ஒருவர்க்கும் கைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/167&oldid=524758" இருந்து மீள்விக்கப்பட்டது