பக்கம்:ஆண்டாள்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

ஆண்டாள்


படாமல் நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் பொருளாய் நிற்பவருமான பெரிய பெருமாள், ஏற்கெனவே என் கையிலுள்ள பொருள்களையெல்லாம் கொள்ளை கொண்டவராக இருக்க, இப்போது என் உடம்பாகிற பொருளையும் கொள்ளை கொண்டு விட்டார் என்கிறார் ஆண்டாள்.

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்,காவிரிநீர்
செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்,
எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே101

இவ்வாறு தன் கள்ளமில்லாக்காதலை வெளிப்படுத்தும் பாங்கில் பளிரிடும் பாவையின் பாடல்களில் குற்றமொன்றில்லாக் கோதில் தீர் தமிழ் துலங்கக் காணலாம்.

இவ்வாறு இரவும் பகலும் எம்பெருமான்தன் நினைவன்றி வேறொன்றும் இல்லாத கோதையார் இராப்போதில் ஒரு சிறிது கண்ணயரக் களாவொன்று காணுகின்றார். எண்ணத்தின் திண்ணிய நிலையில் கனவு வெளிப்படுதல் இயல் பேயன்றோ! அவ்வகையில் இனிய கனவுக் காட்சிகள் அவர் உள்ளத்திரையில் விரிகின்றன. அக்காட்சிகளைக் கவின்மிகு ஒவியங்களாக்குகின்றார் கோதையார். கோதை கண்ட கனவு கோவிந்தனை மணக்கும் கணவன்றோ! எனவே ஆய்ந்தெடுத்த சொற்களில், அழகுக் குவியலாய்த் தோற்றம் தரும் அக்கவிஞர் கவிதை, காலம் கடந்தும் கால வெள்ளத்தில் அழியாத அமரத் தன்மை வாய்ந்த பாடல்களாகத் திகழ்கின்றன. 'வாரணமாயிரம்' எனத் தொடங்கும் அவ் ஆறாந்திருமொழி அழகுக் கவிதை ஊற்று எனலாம்; சந்தமார் கவிதைகளின் சாரமெனலாம்; குற்றமில்லாக் கவிதைகளின் கொலுவெனலாம்; சுருங்கச் சொன்னால் எது உயர் கவிதை எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/168&oldid=1462169" இருந்து மீள்விக்கப்பட்டது