பக்கம்:ஆண்டாள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். சி. பா.
15
 


பக்திமணங் கமழும் கடவுட் பாடல்கள் தமிழ் இலக்கியச் செல்வத்தைப் பெருகின. சைவ சமயக் குரவர்கனாகிய அப்பர் ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலானோர் மிகுதியான இறைநெறிப் பாடல்களைப் பாடிப் பரவியுள்ளனர். ஆழ்வார்களும் மிகுதியான பாடல்கள் பாடியுள்ளனர்: தமிழ்க் கவிதையில் உள்ளத்தை உருக்கக்கூடிய ஒரு தனிச் சிறப்பு ஆழ்வார் பாசுரங்களில் உண்டு. தமிழ் நாட்டில் இறைநெறி (பக்தி மார்க்கம்) பரவுவதற்கு ஈடும் எடுப்பும் அற்ற இனிமைத்தமிழ் ஒரு சிறந்த கருவியாக இருந்து வந்திருக்கின்றது. தமிழ்நாட்டின் அறமும் பிறவும் இவர்கள் பாடல்களால் நன்கு விளங்கும்.

பின்னர், சமண சமயமும் பெளத்த சமயமும் ஈண்டுக் காலூன்றி, சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒரு மனப்பட்டுத் தமிழை வளர்த்த நிலையுண்டு. இடைக் காலத்தில் இணக்கமின்றிப் பிணக்கம் தலைக்காட்டிற்று. சமண சமயத்திற்கும் இந்து சமயத்திற்கும் பகைமை முதிர்ந்தது. இந்தச் சமயத்தில் தமிழ்நாட்டு அரசர்களிற் சிலர் சமண சமயத்தைச் சார்ந்து நின்றனர்; சிலர் இந்து சமயத்திலே இணங்கி இருந்தனர். ஆகவே எங்கும் குழப்பமும் பிணக்கமும் நிறைந்திருந்தன. இந்நிலையில் இந்து சமயத்தை ஆதரித்து நிலைநிறுத்துவதற்கு ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. வைணவமும் சைவமும் இவர்களால் வீறு பெற்றன.

"சைவ சமயத் தலைவர்களாகிய நாயன்மார்களும், வைணவ சமயத் தலைவர்களாகிய ஆழ்வார்களும் மக்கள் உள்ளத்தைப் பக்தி மார்க்கத்தில் செலுத்த, முயன்றார்கள். எல்லாம்வல்ல இறைவனையே பாடவேண்டும் என்று பணித்தார்கள்; பக்தி ரசம் நிறைந்த பாடல்களைப் பாடினார்கள். ஊர் ஊராகச் சென்று உருக்கமான பாட்டிசைத்தார்கள்: கோவில் கண்ட இடமெல்லாம் குழைத்து குழைந்து பாடித் தொழுதார்கள். பக்திச் சுவை சொட்திம் பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/17&oldid=723338" இருந்து மீள்விக்கப்பட்டது