பக்கம்:ஆண்டாள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

ஆண்டாள்


"தோழீ! இந்திரன் முதலான தேவர்களெல்லாம் இம் மண்ணுலகத்திற்கு இழிந்து வந்து, என்னைத் திருமணப் பெண் என்று குறிப்பிட்டு ஒரு வார்த்தை சொல்லி அதற்கு மேல் சம்பந்திகள் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக யோசித்து முடிவு செய்து கொண்டு, துர்க்கை என்கிற நாத்தனார் எனக்குத் திருமணக் கோடிப் புடவையை உடுத்தி, மணம் மிக்க மலர்களையும் சூட்டிவிட நான் கனவு கண்டேன்."

"தோழீ! சிற்றேவல் செய்யும் பிராமணச் சிறுவர்கள் நான்கு திசைகளிலுமிருந்து தீர்த்தங்களைக் கொண்டுவந்து நன்றாகத் தெளித்து, ஒலிக்கக் கூறி, மங்களா சாசனமும் செய்து, மலர்கள் பல புனைந்த மாலையையுடையனாய்ப் பரம புண்ணியனான கண்ணபிரானோடு என்னை ஒன்று சேர்த்துக் கங்கணங்கட்ட நான் கனவு கண்டேன்."

இந்திர னுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்104

"தோழீ! அழகிய இளம் பெண்கள் கதிரவனுடைய ஒளியினை நிகர்த்த மங்கல தீபத்தையும், பொற்கலசங்களையும் கையில் ஏந்திக் கொண்டு எதிர் கொண்டுவர, வடமதுரை அரசர்பிரானாம் கண்ணன் பாதுகைகளைச் சாத்திக் கொண்டு, தரைநிலம் அதிரும் படியாக எழுந்தருளக் கனாக்கண்டேன் நான்."

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீநான்105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/170&oldid=1462171" இலிருந்து மீள்விக்கப்பட்டது