பக்கம்:ஆண்டாள்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

169


கதிரொளி தீபம்க லசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்னன டிநிலை தொட்டு, எங்கும்
அதிரப்பு குதக்க னாக்கண்டேன் தோழீநான்106

"தோழீ! மத்தளங்கள் முழங்கவும், இரேகைகள் பொருந்திய உத்தம வலம்புரிச் சங்குகளை ஊதவும், மைத்துனன் முறையை யுடையவனாய் நின்றிலங்கும் கண்ணபிரான், முத்துக்களையுடைய மாலைத்திரள்கள் தொங்கவிடப்பெற்ற பந்தலின் கீழே வந்து என் கையினைப் பற்றி நிற்க நான் கனாக் கண்டேன்"

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பிம துசூதன் வந்து, என்னைக்
கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்107

"தோழீ! நல்லபடி மறைகளை ஒதும் வைதிகச் செல்வர்கள் சிறந்த மறைத்தொடர்களை உச்சரிக்க, அந்தந்தக் கிரியைகளுக்கு இசைந்த மந்திரங்களைக் கொண்டு, பசுமை தங்கிய இலைகளை யுடைத்தான நாணற்புல்லைப் படுக்கவைத்து, சமித்துகளை இட்டு ஆண்யானை போன்ற செருக்குடைய வீரனாம் கண்ணபிரான் என் கையைப் பிடித்துக் கொண்டு நெருப்பைச் சுற்றிவர நான் கனவு கண்டேன்."

வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல்ப டுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக் கனாக்கண்டேன் தோழீநான்108

"ஏ தோழியே இப்பிறவிக்கும் இனிமேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும் பற்றுக்கோடாய் இருப்பவனாய், நமக்கு

ஆ. —1 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/171&oldid=1462172" இருந்து மீள்விக்கப்பட்டது