பக்கம்:ஆண்டாள்.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். சி. பா.
171
 


குங்கும மப்பிக்கு விர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்,
அங்கவ னோடுமு டன்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்111

இந்த ஆறாந்திருமொழிப் பாடல்கள் முற்றும் பாடப் பெறாமல் இன்றும் திவ்விய வைணவர் குடும்பங்களில் திருமணம் நடை பெறாது. திருப்பூட்டு என்ற சொல் தாலி கட்டலைக் குறிக்கும். திருப்பூட்டு, சாத்தமுது, அக்கார வடிசில், திருக்கண்ணமுது முதலான நல்ல தமிழ்ச் சொற்கள் அக்குடும்பங்களில்தான் இன்றும் வழங்குகின்றன.

மேலும் இத்திருமொழியினை ஓதுவதால் உண்டாகும் பயனைக் குறிப்பிடும் ஆண்டாள். இத்திருமொழி குறித்துத் தாமே சற்றுச் சிறப்பாகவே சாற்றியிருப்பதாகத் தோற்றுகின்றது.

வேயர் குலத்தவரால் புகழப்பட்டவராய்த் திருவில்லி புத்தூருக்குத் தலைவரான பெரியாழ்வாருடைய திருமகளரான ஆண்டாள், தான் கோபாலகிருட்டிணனுக்கு வாழ்க்கைப் பட்டதாகக் கனாக் கண்டபடியைக் குறித்து அருளிச்செய்த தூய தமிழ்த் தொடையலான இப்பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் நற்பண்புகள் வாய்ந்த சிறந்த பிள்ளைகளைப் பெற்று மகிழ்வர்.

ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை,
வேயர்பு கழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூயத மிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்றும கிழ்வரே112

"நோக்குவ எல்லாம் அவையே போறல்" என்றோர் தொடர் அகப்பொருள் இலக்கணங்களில் அமையும். சங்க காலத் தலைவியொருத்தி. தலைவன் வாழும் மலையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/173&oldid=1158122" இருந்து மீள்விக்கப்பட்டது