பக்கம்:ஆண்டாள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

ஆண்டாள்


கண்டாலும், அவனையே கண்ட மகிழ்வை - உள்ளுணர்வைப் பெறுகின்றாள். அவள் வாழும் குன்றத்தை நோக்கினாலே அவன் பிரிவால் பசலையுற்ற நெற்றி மீண்டும் பழைய நிலைமைக்கு ஒளிபெற்று விளங்குகின்றதாம்.

இனமயில் அகவும் மரம்பயில் கானத்து
நரைமுக வூகம் பார்ப்பொடு பனிப்பப்
படுமழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்றம் நோக்கினென் தோழி
பண்டை யற்றே கண்டிசின் நுதலே113
வாழை தந் தனையாற் சிலம்புபுல் லெனவே114

தலைவன் நாட்டு மலையில் வாழைமரம் கண்டு வாட்ட முற்றிருந்த தலைவி பற்றிய பாட்டு இது.

இம்முறையில் ஆண்டாளும் பதுமநாபன் கையில் பல காலமும் பிரியாமல் திகழும் பாஞ்ச சன்னியம் என்னும் சங்கினை எம்பெருமானோடு சுற்றமாக்கிப் பேசுகின்றார். "கருப்பூரம் நாறுமோ?" என்று தொடங்கும் ஏழாந் திருமொழிப் பாடல் சிறந்த சொற்களின் அணிவகுப்பாய், உயரிய கற்பனைகளின் உறைவிடமாய், உணர்ச்சி வெள்ளங்களின் வடிகாலாய்த் திகழக் காணலாம். முதற்பாடலே இதற்குச் சான்றெனலாம்.

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே115

"ஏ! அழகிய சங்கே! நீ கடலிற் பிறந்து, அங்கு நின்றும் பஞ்சஜனன் என்ற அசுரனுடைய உடன்பிற்போய் வளர்ந்து, இப்படிப் பிறந்த இடத்தையும் மறந்து, வளர்த்த இடத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/174&oldid=1462175" இலிருந்து மீள்விக்கப்பட்டது