பக்கம்:ஆண்டாள்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். சி. பா.
175
 


எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புகிறார்கள், எங்கள் வாழ்க்கையை இவன் ஒருவனே கொள்ளை கொள்கின்றானென்று பூசல் இடுகின்றார்கள்; கலாம் விளைவிக்கின்றார்கள். இவ்வாறு இரக்கத்திற்குரிய பெண்கள் வருந்தும்வண்ணம் நீ அநியாயமான செயலைச் செய்கிறாய். இச்செயல் எவ்வகையிற் பார்த்தாலும் உனக்குத் தகுதியுடையதன்று."

உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்,
கண்படை கொள்ளில்க டல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே!120

"பெரிய செல்வம் படைத்த சங்கமே! பதினாறாயிரம் தேவிமார்கள் கண்ணபிரானுடைய வாயமுதத்தை நாம் பருக வேண்டும் என்று விரும்பி எதிர்பார்த்து நிற்கிறார்கள். பகவான் கண்ணனிடம் ஆரா அன்பு செலுத்துவோர் அனைவரும் உண்ணற்குரிய பொருளாகப் பொதுவில் உள்ள அவ் எம்பெருமானது வாயமுதத்தை நீ ஒருவனே அடாது புகுந்து தேனை உண்கிறாப்போல் உண்டால், மற்றப் பேர்கள் எல்லோரும் உன்னோடு மாறிட மாட்டார்களா என்றபடி.

பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்.
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே!121

இவ் ஏழாந் திருமொழியை அநுசந்திப்பவர்கள் எவ்வாறு பாஞ்ச சன்னியம் பதுமநாபனுக்கு அணுக்கனாய் விளங்குகின்றதோ அதுபோல் அணுக்கராய்; அந்தரங்கராய் திகழும் பேறு பெறுவர் என்று ஏழாந் திருமொழியின் இறுதிப்பாடலில் தலைக் கட்டுகிறார் ஆண்டாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/177&oldid=1158126" இருந்து மீள்விக்கப்பட்டது