பக்கம்:ஆண்டாள்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

ஆண்டாள்


பாஞ்சசன் னியத்தை பற்பநா பனோடும்.
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வன்புதுவை,
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,
ஆய்ந்தேத்த வல்லாரா ரவரும னுக்கரே 122

மைத்துனன் நம்பி மதுசூதனன் நம்பி கைத்தலம், பற்றிடக் கனவு கண்ட பின்னரும், பாஞ்ச சன்னியத்தைப் பார்த்து அதன் சீரார்ந்த சிறப்பு நிலைக்கு மாறுபட்டு மனம் மறுகி நின்ற நிலையிலும் ஆண்டாளின் காதல் துயரம் கட்டை யுடைத்துக் கொண்டு செல்கின்றது; கரை புரண்டோடிவரும் காட்டாற்று வெள்ளம்போல் அவர் காதல் வெள்ளம் கரையிலவாகிறது. எனவே கண்ணபிரான் விரும்புயுறையும் தலங்களிலே தம்மைக் கொண்டு போய்ச் சேர்க்குமாறு தம்மோடு இருப்பவர்களைப் பார்த்து வேண்டுகிறார் ஆண்டாள். பேதலித்து, அவலித்து அரற்றிஅழும் மனநிலையில் எழுந்த பாடல்கள் பன்னிரண்டாம் திருமொழியாக அமைந்துள்ளன.

துன்பத்தில் தோய்ந்த அவல உணர்வுகள் பொங்கிப் பீறிடும் நிலையைப் பின்வரும் பாடல்களிற் காணலாம்.

"என்னுடைய முடிவுக்கு மாறுபாடாக இருக்கிற உங்களுக்கு எதுவும் புரியாது. மாதவன்மாட்டு மாறாக் காதல் கொண்டு விட்ட எனக்கு நீங்கள் சொல்வதெல்லாம் ஊமையும் செவிடனும் கூடி வார்த்தை சொல்லிக் கொள்வதுபோல் வீணாகும். இப்போது நீங்கள் எனக்குச் செய்யத்தக்கது என்னவென்றால் பெற்ற தாயாம் தேவகியை விட்டு நீங்கி, வேறொரு தாயாகிய யசோதைப் பிராட்டியின் வீட்டிலே வளர்ந்தவனும், மற்போரில் வல்லவனுமான கண்ணபிரான் உறையும் நகரமாகிய வட மதுராபுரிக்கு அருகில் ஏதேனும் ஒரு பகுதியில் என்னைக் கொண்டு சேர்ந்துவிடுங்கன்,"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/178&oldid=1462179" இருந்து மீள்விக்கப்பட்டது