பக்கம்:ஆண்டாள்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். சி. பா.
177
 


மற்றிருந் தீர்கட் கறியலாகா
மாதவ னென்பதோ ரன்புதனை
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்
ஊமைய ரோடுசெவிடர் வார்த்தை
பெற்றிருந் தாளை யொழிவேபோய்ப்
பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி,
மற்பொருந் தாமற் களமடைந்த
மதுரைப் புரத்தென்னை யுய்த்திடுமின்123

"இனி வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை; காதல் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஊரார் என் காதற் செய்தியை அறிந்து கொண்டார்கள் நீங்கள் உள்ளபடியே என்னைக் காப்பாற்ற விரும்பினால் திருவிக்கிரமாவதாரம் எடுத்து இவ்வுலகளந்த கண்ணன் வாழும் திருவாய்ப்பாடியிலே கொண்டு சேர்த்து விடுங்கள். அப்போதுதான் என் நோய் தலைமடங்கும்."

நாணி யினியோர் கருமமில்லை
நாலய லாரும் அறிந்தொழிந்தார்,
பாணியா தென்னை மருந்துசெய்து
பண்டுபண் டாக்க வுறுதிராகில்
மாணி யுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்,
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்124

"தகப்பனாரும் தாய்மாரும் மற்றுமுள்ள உறவினரும் இருக்கும்போது இவள் தான்தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள் என்ற வார்த்தையானது உலகில் பரவின பிறகு அப்பழியைத் தடுக்க முடியாது. கண்ணன் என் எதிரே வந்து தன் வடிவழகு சாட்டி என்னை மயக்குகின்றான். எனவே இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டுவது என்னவென்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/179&oldid=1158201" இருந்து மீள்விக்கப்பட்டது