பக்கம்:ஆண்டாள்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
178
ஆண்டாள்
 


பெண்களைக் குடிகெடுத்துக் குறும்புசெய்யும் பிள்ளையைப் பெற்றவனான நந்தகோபருடைய திருமாளிகை வாசலிலே நள்ளிரவிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்" என்பதாம்.

தந்தையும் தாயுமுற் றாரும் நிற்கத்
தனிவழி போயினாள் என்னும்சொல்லு,
வந்தபின் னைப்பழி காப்பரிது
மாயவன் வந்துருக் காட்டுகின்றான்,
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற,
நந்தகோ பாலன் கடைத்த லைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்125

மேலும் ஆண்டாள் தன்னை யமுனைக் கரையிலும் காளிங்க நர்த்தனம் செய்த இடத்திலும், பந்தவிலோசனம் என்கிற இடத்திலும், பாண்டீரம் என்னும் ஆலமரத்தின் அருகிலும். கோவர்த்தன மலையின் அருகிலும், துவாரகைக்கு அருகிலும் கொண்டு போய்ச் சேர்த்திடுமாறு வேண்டும் கூற்றில் அவலம் இழையோடக் காணலாம்.

குலசேகராழ்வார் திருவேங்கடமலையில் கோனேரி வாழும் குருகாய்ப் பிறக்க வேண்டுமென எண்ணங்கொண்டார்; இரண்டாவதாகத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்க வேண்டுமென நினைத்தார். வேங்கடக்கோன் தானுமிழும் பொன்வட்டிலாய்ப் பிறக்க மனம் பற்றினார். பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்தில் செண்பக மரமாய் நிற்கும் திருவிற்கு ஏங்கினார். எம்பெருமான் நான் எழில் வேங்கடமலைமேல் தம்பகமாய் நிற்கும் தவத்தை அவாவினார். தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் பொற்குவடாகத் திகழத் திருவுளங் கொண்டார் தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடமலைமேல் கானாறாய்ப் பாயும் கருத்துக்கொண்டார். வெறியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/180&oldid=1158207" இருந்து மீள்விக்கப்பட்டது