பக்கம்:ஆண்டாள்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர். சி. பா.
179
 


தண்சோலைத் திருவேங்கடமலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலையினை நீள நினைந்தார் படியாய்க் கிடந்து பவளவாய் காண்பேனே என்று துள்ளிவரும் உவகைப் பெருக்கோடு உரைத்தார். இறுதியாகச் செம்பவளவாயான் திருவேங்கட மென்னும் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாவேனே என்று குறிப்பிட்டார்

இம்முறையிலேயே நாச்சியாரும் அச்சுதன் அணியும் பொருள்கள் கொண்டு தம் அவலத்தைத் தணிக்க வேண்டு மென்று தம்மைச் சுற்றியிருந்தோரைப் பார்த்துப் பேக கின்றார். பதின்மூன்றாந் திருமொழி 'கண்ணனென்னும் கருத்தெய்வம்' என்று தொடங்குகின்றது; சில அரிய உவமை களைக் கொண்டு திகழ்கின்றது. நாச்சியார் படும் நலிவுகளை எல்லாம் நயம்படக் கிளத்தி நிற்கிறது.

கண்ணனென்னும் கருந்தெய்வத்தின் காட்சியில் பழகிக் கிடக்கிறாராம் ஆண்டாள் அப்போது புண்ணில் புளிரசத் தைப் பெய்து கொடுமை சேர்த்தது போன்று பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து, பெண்ணின் வருத்தம் ஈதென்று அறியாத கண்ணபெருமானுடைய திருவரையிற் சாத்திய பிதாம்பரத்தைக் கொண்டு வந்து என் காதல் துன்பம் தணியும்படி என்மேல் வீசுங்கள் எனக்கேட்டுக் கொள்கிறார் கோதையார். -

பால்பாயும் பருவத்தையுடைய ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளும் கண்ணபெருமானுடைய வலையிலே ஆட் பட்டுக்கொண்டிருக்கிற என்னைக்குறித்து வேலாயுதத்தை இட்டுத் துளைத்தாற் போல் உங்களுக்குத் தோன்றினபடி யெல்லாம் கொடுமையாகக் கூறுவதைத் தவிர்த்து இடைப் பிள்ளாய் கையில் இடைச்சாதிக்கு உரியகோலைக்கொண்டு பசுக்கூட்டத்தை மேய்த்தவனாய், திருக் குடந்தையில் திருக் கண் வளர்ந்து அருளுபவனாய்க் குடக்கூத்தை நிகழ்த்தியவனு மான கண்ணபிரானுடைய பசுமையும் குளிர்ச்சியும் அழகுங்

கொண்ட திருத்துழாயைக் கொண்டு வந்து நெறிப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/181&oldid=524772" இருந்து மீள்விக்கப்பட்டது