பக்கம்:ஆண்டாள்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். சி. பா.
183
 


இத் திருமொழியின் சிறப்பு யாதெனில் முன்னிரண்டு அடிகளும் ஒருவர் வினவும் போக்கில் அமையப் பின்னிரண்டடிகள் அவ்வினாவிற்கு விடையாக அமைவதாகும்.

கண்ணபிரான் என்கிற கறுத்த காளையொன்று காவலின்றி எங்கும் சுதந்திரமாய்த் திரிந்து கொண்டும், பலராமனுக்கு ஒப்பற்ற தம்பியாய் மகிழ்ச்சி சுரப்பதற்கு ஒரு வடிகாலாய் அமைந்து விளையாடிக்கொண்டும் இந்தப் பக்கமாக வரப் பார்த்தீர்களோ? தனக்கு விருப்பமான பசுக்களைத் திருப்தியாக மடக்கி மேய்த்து, தண்ணிர் குடிப்பித்து இந்தப் பக்கமாக அவற்றை மேயவிட்டுக் கொண்டு அப்பெருமான் விளையாடி நிற்கும் பிருந்தாவனத்திலே கண்டு கைதொழுநேரம் என்கிறார் ஆண்டாள்.

பட்டி மேய்ந்தோர் காரேறு
பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்,
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டிரே? -
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீருட்டி,
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே128

இவ்வாறு ஒவ்வொரு பாட்டும் அமைந்திருக்கக் காணலாம்.

பாகவதர்களை முன்னிட்டே ஈஸ்வானிடம் செல்ல வேண்டுமென்பது வைணவத்தின் வழக்கு. இது மற்றையோருக்கு ஒரே இடத்தில் உருக்கொண்டுள்ளது. நம் சூடிக் கொடுத்த சுடர்கொடிக்கோ, இத்தத்துவம் திருப்பாவை முதற் பாசுரந் தொடங்கி நாச்சியார் திருமொழி இறுதிப் பாசுரம் வரையும் பொருந்தி இகுத்தலைக் காணலாம். இவர் நூலை ஆராய்பவருக்கு இவர் இறைக்காதல்; படிப்படியாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/185&oldid=1158229" இருந்து மீள்விக்கப்பட்டது