பக்கம்:ஆண்டாள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

ஆண்டாள்


பெரும்பெருத்த கண்ணாலங்கள் செய்து
பேணிநம் மில்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நாமிருக்க
இவளும்ஒன் றெண்ணுகின்றாள்133

என்றும் பேசியவர், 'திண்ணார் மதிற்சூழ் திருவரங்கனார்' ஆண்டாளை மணமகளாக ஏற்றுக்கொண்டவுடன்.

ஒருமகள் தன்னை யுடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான்கொண்டு போனான்:
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து
மணாட்டுப் புறஞ்செய்யுங் கொல்லோ134

எம்ன்று,

நல்லதோர் தாமரைப்பொய்கை
நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாது முதிர்ந்திட்டு
அழகழிந் தாலொத்த தாலோ!
இல்லம் வெறியோடிற் றாலோ!
என்மக ளைஎங்கும் காணேன்
மல்லரை யட்டவன் பின்போய்
மதுரைப்பு றம்புக்காள் கொல்லோ!135

என்றும் அழுது புலம்புவதினின்றும் அவர்தம் ஆற்றாமையை உணரலாம். திருவரங்கத்து எம்பெருமானே ஆட்கொண்ட அளவிலும் கூடித் தாம் வளர்த்த மகள் ஆண்டாளின் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், ஆண்டாளின் அருளும் பண்புகள் இருந்தவாறு என்னே! ஆண்டான் அருளிய இலக்கியமாம் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் உலகம் உள்ளளவும் நிலைத்துநிற்கும் என்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/188&oldid=1462189" இலிருந்து மீள்விக்கப்பட்டது