பக்கம்:ஆண்டாள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். சி. பா.
17
 


திருவினையாடல்களும், தொல்காப்பியர் காலத்தியேயே பெரிதும் தமிழ்நாட்டிற் பயின்றவனாக அறிகின்றோம். அவரைக் குறித்தாற்றும் வழிபாடு முதலியன ஆரிய முறைப் படியேதான் இன்றும் நடைபெறுகின்றன" என்று கூறும் இலக்கிய வரலாற்றாசிரியர் கருத்துச் சிந்திக்கத் தக்கது." (ஈ. எஸ். வரதராச ஐயர், தமிழ் இலக்கிய வரலாறு, கி. பி. 1 முதல் 11 வரை, ப. 210.)

வழிவழி வந்தவண்

திருமால் வழிபாடு தமிழ்நாட்டில் மிகப் பழமையான தாகும். தமிழகம் முல்லை. குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று நானிலமாகப் பெயர் வழங்கிய காலத்திலிருந்தே இவ்வழிபாடு தோன்றிவிட்டது.

மாயோன் மேய காடுதுறை யுலகமும்'

= தொல்காப்பியம்: அகத்திணையியல், 2.

என்று தொடங்கும் நூற்பா மாயோணைப் பற்றிய குறிப் பினைத் தருகின்றது. தெய்வமும் ஒருநிலக் கருப்பொருள் என்றும், முல்லை நிலத் தெய்வம் மாயோன் என்றும் இதனால் உணருகின்றோம். இனி யடுத்தும்,

மேவிய சிறப்பி னேனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையால் பிழைத்தல் பிழையா தாக வேண்டியும்' ഒു., 28

என்றும் கூறுவர் தொல்காப்பியனார். மாயோன், சேயோன், வேந்தன். வருணன் ஆகிய கடவுளர்க்குக் கோயிலும், அவற்றில் அவர்களது திருமேனிப் படிமங்களும் வைத்து வணங்கப்பட்டு வந்தவனென்றும் அறிகின்றோம். மேற் காணும் நூற்பாவால், அப்மடிப் படிமைகள் அமைந்த கோயில்கனைக் காத்தற்கு அரசர் முதலானோர் தம் மனையைப் பிரிந்து செல்வர் என்பது தெரியவருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/19&oldid=954771" இருந்து மீள்விக்கப்பட்டது