பக்கம்:ஆண்டாள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
ஆண்டாள்
 


மேலும் மனபெருஞ் சிறப்லனையும், தாவா விழுப்புகழ் புகழினையும் திருமாலாம் மாயோற்ஞ் ஏற்றிச் சிறப்பித்துக் கூறுதல் அத்திருமாலின் கடவுள் பண்பினைத் தோற்று மிக்கவேயாம் என்பது திண்ணம்." (தொல், புறத். 60)

- தென்னவன் தொல்லிசை நட்டகுடியொடு தோன்றிய நல்லினத்து ஆயர்" வணங்கிவந்த முல்லைநிலக் கடவுள் பின்னர்த் திணை கடந்த கடவுள் ஆயினான்.

பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படையில் பாட்டு டைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவான். அவன் திருமால் மரபில் தோன்றிய சோழர்வழி வந்தவன். என்பதனை,

இருநிலங் கடந்த திருமறு மார்பின்
முன்னீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த்
திரைதரு மரபி னுரவோ னும்பல்'

- பெரும்பாணாற்றுப்படை : 29-31


என்ற அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. இளந்திரையனது நகர வருணனையில் திருமாலினது திருவுந்திக் கமலத்தைப் போன்று பழமையும் சிறப்பும் வாய்ந்தது என்று கூறுவதை நோக்கலாம்." (பெரும்பாணாற்றுப்படை : 408-405). இன்னும் விரிவாகவே அந்நகரெல்லையில் உள்ள திருவெஃகா என்னும் தலத்தில் திருமால் பாம்பணையிற் பள்ளிகொண் டருளியுள்ள திருக்கோலம் விளக்கப்படுகின்றது.

நாடு.பல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிங் தாங்குப்
பாம்பனைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்18

-பெரும்பாணாற்றுப்படை : 371-873


என்னும் காட்சியால் அப்பழங்காலத்தில் திருமாலுக்கு ஆலயம் அமைந்துள்ளமை தெளிவாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/20&oldid=955009" இருந்து மீள்விக்கப்பட்டது