பக்கம்:ஆண்டாள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். சி. பா.
21
 


மாக ஒகந்துார் என்னும் ஊரைத் தேவதானமாகக் கொடுத்தானென்றும் இப்புலவர் கூற்றால் அறிகின்றோம்.

இல்வாற்றால் சங்ககாலத்திலிருந்தே சேரநாட்டில் திருமால் வழிபாடு மிக்கிருந்தது என்று உணரக் கிடக்கின்றது.

புறநானூற்றில் அழகிய நீல மணிபோலும் திருமேனியையும், வானுற வோங்கிய கருடக் கொடியையுமுடைய வென்றியை விரும்புவோனாகிய கண்ணன்,

மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோன்

                    - புறநானூறு; 55 : 5-6

என்ற அடிகளால் குறிக்கப்படுகின்றான். яя புகழின் எல்லைக்கு மாயோன் உவமானமாகப் பழம்புலவர்களால் கருதப்பட்டமை, காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்,

வல்லாராயினும் வல்லுநராயினும்
புகழ்தலுற் றோர்க்கு மாயோ னன்ன
உரைசால் சிறப்பிற் புகழை --
                        -புறநானூறு, 57 : 1.3

என்று எடுத்தோதுவதால் விளக்கமுறும்.23

இவை போன்று புறநானூற்றுப் பல பாடல்களில் திருமாலின் திருவிளையாடலும், திருமால் ஆலிலையில் பொருந்திய வரலாறு போன்றவையும் குறிக்கப்படுகின்றன, (காண்க. பாடல்கள் புறம். 174 : 1.3, 189.9, 199-1. 378 : 18-24).

புறநானூற்றிலும் அகநானூற்றிலும் இராமாயணக் கதைகளையொட்டிய செய்திகள் சொல்லப்படுகின்றன." பாகவத புராண வரலாறொன்றும் அகநானூற்றில் காணப்படுகிறது. நீர்வளம் அறாத யமுனையாற்றில் நெடிய மணலையுடைய அகன்ற துறையில் நீராடிய ஆயர்மகளிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/23&oldid=955013" இருந்து மீள்விக்கப்பட்டது