பக்கம்:ஆண்டாள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


34 ஆண்டrள்

சேர்ந்தவர்கள் 'பிறவிப் பெருங்கடல் நீந்தி' மறுபிறப்பு என்பதே இல்லாமல் - வீடுபேற்று இன்பத்தை அடைவர் என்பது தெரிய வருகின்றது

இனி, திருக்குறளிலும் 'அடியளந்தான் தாஅயது எல்லாம்' என்றும், 'தாமரைக்கண்ணான் உலகு' என்றும் கூறப்படுகின்றன. இவற்றினின்றும், லீலாவிபூதி, நித்திய விபூதி என்ற இருவகைப் பெருஞ் செல்வங்கட்கும் அதிபதி திருமாலே என்ற வைணவக் கொள்கை திருவள்ளுவர் திருவுள்ளத்திற்கு உவப்பாயிருந்தது என்பது பு ல ப் ப டு ம்' என்பர் 3ே (ஜி. எத்திராஜுலு நாயுடு, பக்திப் பூங்கா, ப. 4). ஆகவே திருவள்ளுவரை வைணவப் பற்றுடையோர் என்று சொல்ல வைப்பதற்கும் இன்னும் ஒரு படிமேலே போய், திருவள்ளுவரை அச்சமயத்தைச் சார்ந்தவரென்று எணண வைப்பதற்கும் திருமால் பற்றிய கருத்துகள் குறட்பாக்களில் கிடந்து மயக்கந்தருகின்றன எனலாம்.

சமண மதக் கொள்கைகளை வலியுறுத்த எழுந்த சிலப்பதிகாரத்தில் திருமால் வழிபாடு போற்றப்படுகின்றது. ஆய்ச்சியர் குரவை இதனை அழகுறக் காட்டுகின்றது. மேலும் இந்நூலில் திருவேங்கடத்தில் திருமால் நின்று கொண்டு காட்சியளிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசைப் பொலம்பூ வாடையிற் பொலிந்து தேரன்றிய செங்கண் நெடியோ னின்ற வண்ணமும்

என்னும் அடிகள் நெடியோனின் கோலத்தை நவில்கின்றன.

பெளத்த சமயக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட 'மணிமேகலை'யிலும் 'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றிய கதை' விவரிக்கப்படுகின்றது.

இந்நூலுள் சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதையுள் வைணவ வாதம் கூறப்படுதலாலும், வைணவ சமயத்தின் முதனமை அறியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/26&oldid=954806" இருந்து மீள்விக்கப்பட்டது