பக்கம்:ஆண்டாள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஆண்டாள்


சங்ககாலம் ஒரு தங்க நிகர் காலமென்றால் இந்தப் பக்தி, இயக்கம் மற்றுமொரு பொற்காலத்தை உருவாக்கியது என்று துணியலாம்.

ஆழ்வார்கள்

வைணவ சம்பிரதாயத்தின்படி வைணவ சமயத்தைச் சிறப்பித்தவராகக் கருதப்படும் பெரியோர்கள் "ஆழ்வார்கள்' என்றும் ஆசார்யர்கள் என்றும் இருவகைப்படுவர். வைணவம் எப்படிப் பரவியது என்பதை ஒரு கூற்று சிறப்பாக வினக்குகின்றது. ஶீமந் நாராயணன் ஒரு கருங்கடல். சுவாதந்திரியம் என்ற உப்பு கலந்தது. நம்மாழ்வார் என்ற மேகம் கிரகித்து அதன் சம்மந்தத்தால் உப்பு அகன்று காருண்ய மாகிய நீரை நாதமுனி என்ற மலையில் பெய்விக்க உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி என்கிற இரு அருவிகள் மூலம் அந்த நீர் ஆளவந்தார் என்ற நதியில் கலக்கிறது. அதிலிருந்து இராமானுசர் என்ற ஏரிக்கு வந்து அவரால் ஏற்படுத்தப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகள் ஆகிற மதகுகள் மூலம் சேதனப் பயிருக்கு வைணவம் என்ற நீர் பாய்ச்சப்படுகிறது.

(காழியூர் சேஷாத்திரி மணவாளன், இராமாநுஜர், ப. 119)

திருமாலை வழிபட்டு வைணவ சமயத்திற்குப் புத்துணர்ச்சி அளித்த இறைநெறியாளர் ஆழ்வார்கள் எனப் படுபவர். "ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கே 'இறைவன் குணங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவர்' என்பது பொருள் என்பர். ஆம்!. இவர்கள் பெருமானாகிய திருமாலது மங்கள குணங்களாகிய அமுத வெள்ளத்தில் ஈடுபட்டு ஆழ்ந்து இருந்தவர்களாதலால் ஆழ்வார்கள் எனப் பெயர் பெற்றனர். இனறயன்பில் ஆழங்கால் பட்டவர்கள் இவர்கள் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/28&oldid=954811" இலிருந்து மீள்விக்கப்பட்டது