உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஆண்டாள்


தென்பாண்டி நாடு வரை பரவியது. பின்னர் வடநாடுகளிலும் சென்று சேர்ந்தது. இவர்களின் தொண்டு காரணமாக வைணவர்கள் இவர்களை 'அவதார புருடர்கள்' எனக் கருதி வழிபடுவர். இவர்களுடைய வரலாறு கூறும் வரலாற்று நூற்கள் பல. அவற்றுள் இராமாநுஜர் காலத்திருந்த கருடவாகன பண்டிதர் செய்யுள் வடிவிலியற்றிய 'திவ்யசூரி சரிதை'யும்' நம்பிள்ளை காலத்தவரான பின்பழகிய பெருமாள் சீயர் மணிப்பிரவாள நடையில் எழுதிய ஆறாயிரப்படி குருபரம்பரையும் காலத்தால் முற்பட்டவை எனலாம்

ஆழ்வார்கள் பன்னிருவர். இப் பன்னிருவரையும் வரிசைப் படுத்துமிடத்துப் பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார். பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்களென முன்னிற்கின்றனர். ஆகவே, முதலாழ்வார்கள், திருமழிசையார், குலசேகராழ்வார், பெரியாழ்வார். ஆண்டாள், தொண்டாடிப் பொடிகள், திருப்பாணாழ்வார், திருமங்கை மன்னன். நம்மாழ்வார், மதுரகவி என்பதே காலவரையறை பற்றிய முறை எனக்கொள்ளலாம் என்பர்" (ஈ. எஸ் வரதராச ஐயர், தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி. 1 முதல் 110 ப. 805).

இவர்களுள் பொய்கையாழ்வாரை வைணவ சமயத்தின் விடிவெள்ளி என்பர். ஏனெனில் ஶீ பாஷ்யம் செய்த இராமாநுஜர் பொய்கையார் ஏற்றிய ஞான தீபத்தைத் தமக்கு வழிகாட்டியாகக் கொண்டார் என்கிறார் அமுதனார். முதலாழ்வார்கள் மூவரையும் வைணவ சமயத்தின் ஆதி கவிகள் என்றும் கூறலாம் என்பது பொருந்தும்." (எம் ராதா கிருஷ்ண பிள்னை, பிற்கால வைணவம், ப. 14).

ஐந்து வகை ஞானத்தைப் பற்றிய (அர்த்த பஞ்ச ஞானம்) வைணவ பூருவர் கூறுவர். அவை ஸ்வஸ்வரூபம், பரஸ்வரூபம், புருஷார்த்த ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம் என்பனவாம்.

அர்த்தபஞ்சகம் என்றால் அறிய வேண்டிய ஐந்து பொருள்கள் என்பது பொருள். அவற்றை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/30&oldid=954815" இலிருந்து மீள்விக்கப்பட்டது